தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலக்கிய பரிசுகளில் பெரும் பரிசுத்தொகை கொண்ட விருதாக திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கிய பரிசு திகழ்ந்து வருகிறது. எழுத்து மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நாவல் போட்டி நடத்தி சிறந்த ஒரு நாவலைத் தேர்வு செய்து அதைக் கவிதா பதிப்பகம் மூலமாக நூலாக்கம் செய்து மேனாள் மத்திய நிதி அமைச்சர் திருமிகு ப.சிதம்பரம் தலைமையில் நூலாக வெளியிட்டு அந்த மேடையில் பரிசுத்தொகை ரூபாய் இரண்டு இலட்சங்களுக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து உட்பட இலக்கிய பேராளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துவார்கள். 2023 ஆம் ஆண்டுக்கான நாவல் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் எழுத்தாளர் ஆசு எழுதிய பஞ்சவர்ணம் எனும் நாவல் சிறந்த நாவலாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்நாவல் வெளியிட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 28.10. 2024 திங்கட் கிழமை அன்று சென்னையில் நடைபெறுகிறது. எழுத்து மற்றும் திருமதி சௌந்தரா கைலாசம் விருது பெறும் எழுத்தாளர் ஆசு அவர்களுக்கு வாழ்த்துகள்