இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024- முடிவுகள் அறிவிப்பு

  இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச்  சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தேன். (முடிவுத் தேதி 3-011-2024). வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச்  சிறுகதைப்  போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப்  போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன். அதேசமயம் போட்டியின் அமைப்பாளர்...

கவிதைக்காக கார் பரிசு பெற்ற கந்தர்வகோட்டை மாணவர் பா. ஆனந்த்

படம்
புதுக்கோட்டை ஜோஸ் ஆலுக்காஸின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்நிறுவனம் கவிதை வடிவில் வாசகம் எழுதும் போட்டி நடத்தியது. ஓராண்டு முழுவதும் நடைபெற்ற இப்போட்டியில்  கந்தர்வகோட்டைக்கும் அருகிலுள்ள மின்னாத்தூர் கிராமத்தைச் சார்ந்த பா. ஆனந்த எனும் மாணவர் எழுதிய வாசகம் சிறந்த கவிதை வாசகமாக தேர்வுசெய்து கார் பரிசாக வழங்கியது. இவர் தஞ்சாவூர் சரபோஜி கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றும் திரு. பாரதிதாசன் அவர்களின் மகன் ஆவார். ஜோஸ் ஆலுக்காஸ் நடத்திய கவிதை வாசகம் போட்டியில் முதலிடம் பெற்று கார் பெற்ற பா. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இரண்டு இலட்சங்கள் பரிசு தொகை நாவல் போட்டி - 2024

படம்
இன்றே எழுதத் தொடங்குங்கள்,,,   எழுத்து மற்றும் சௌந்தரா கைலாசம் இலக்கியப் போட்டியில் 2021 ஆம் ஆண்டு அன்னமழகி எனும் நாவல்  ரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசு பெற்றது.