தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024

2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும் படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் விருதுகளுடன் 

தோழர் கருப்பு கருணா  பெயரால் நுண்கலைகளுக்கான விருதும்,  

தோழர் ஜனநேசன் Jananesan Rv  பெயரால் எழுத்தாளரின் முதல் நூலுக்கான விருதும் இவ்வாண்டு முதல் இணைகின்றன.  


2024ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2025 மார்ச் 10ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்படவேண்டும். 


பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.


நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:


பொதுச்செயலாளர், 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 

மதுரை- 625001  

தொலைபேசி: 0452-2341669 


குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் தனிநபர் இணைய இணைப்புகளை 73730 73573 என்ற புலன எண்ணுக்கு அனுப்பிவைக்கவும். 


தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் விருதுத்தொகை ரூ.10,000/,  சான்றிதழ்  ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 

விருதுகள் 


1. கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல்


2. கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்


3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 


4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு  (நான் ஃபிக்‌ஷன்) நூல் 


5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 


6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 


7. வ.சுப. மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 


8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது: குழந்தைகள் இலக்கிய நூல்  


9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 


10. ஜனநேசன் நினைவு விருது: எழுத்தாளரின் முதல் நூலுக்கானது 

(அச்சு / கையெழுத்துப் பிரதி)


**


11. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 


12. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்


**


பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   


13. மு.சி. கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: 

நாட்டுப்புறக் கலைச்சுடர்


14. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்


15. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்


16. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை


17. கருப்பு கருணா நினைவு விருது: நுண்கலைச்சுடர் 


வாழ்த்துகளுடன்,

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத் தலைவர் 


ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்


10.02.2025


தமுஎகச மாநிலக்குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதைக்காக கார் பரிசு பெற்ற கந்தர்வகோட்டை மாணவர் பா. ஆனந்த்

இலக்கியப் போட்டி -2024, நூல்கள் வரவேற்கப்படுகின்றன