கவிதைக்காக கார் பரிசு பெற்ற கந்தர்வகோட்டை மாணவர் பா. ஆனந்த்
புதுக்கோட்டை ஜோஸ் ஆலுக்காஸின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்நிறுவனம் கவிதை வடிவில் வாசகம் எழுதும் போட்டி நடத்தியது. ஓராண்டு முழுவதும் நடைபெற்ற இப்போட்டியில் கந்தர்வகோட்டைக்கும் அருகிலுள்ள மின்னாத்தூர் கிராமத்தைச் சார்ந்த பா. ஆனந்த எனும் மாணவர் எழுதிய வாசகம் சிறந்த கவிதை வாசகமாக தேர்வுசெய்து கார் பரிசாக வழங்கியது. இவர் தஞ்சாவூர் சரபோஜி கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணியாற்றும் திரு. பாரதிதாசன் அவர்களின் மகன் ஆவார். ஜோஸ் ஆலுக்காஸ் நடத்திய கவிதை வாசகம் போட்டியில் முதலிடம் பெற்று கார் பெற்ற பா. ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

பெருமன்ற விருதாளர்கள் புலனம் எனக்கு வரவில்லை..என் புலன எண் 9443736480
பதிலளிநீக்கு